728x90 AdSpace

Suthan
  • Latest News

    Saturday, August 1, 2015

    ஆரையம்பதி அருள்மிகு ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய மன்மத வருட உற்சவப் பெருவிழா ~ 2015


    மட்டக்களப்பு - ஆரையம்பதி
    அருள்மிகு ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய மன்மத வருட உற்சவப் பெருவிழா ~ 2015

    பேச்சி அன்னை உன்னையே - உயிர்
    மூச்சியாக எண்ணியே ஆண்டு தோறும்

    ஆடி வெள்ளி தேடியே ஒன்றி மக்கள்
    கோடி கூடித் தீ மிதிக்க வாறோமம்மா
    நாடி வரும் எங்களை - முன்னே ஓடி வந்து ஆதரித்துக் காருமம்மா
    ஆரை நகர் வீற்றிருந்து நன்றாய் -என்று
    மூரைக் கோலோட்சும் கோலவிழிப் பேச்சி அம்மா.


    அனைத்து வளம் படைக்கும் ஆரையம்பதியின் வடபால் பக்தர்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றியருளும் தெய்வம் வல்லளாம் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா எதிர்வரும் 01.08.2015 சனிக்கிழமை தொடக்கம் 08.08.2015 சனிக்கிழமை வரை நடாத்துவதற்கு அம்பிகை அருள்பாலித்துள்ளாள் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.

    கிரியாகால நிரலணி
    2015.08.01 பிரம்ம முகூர்த்தத்தில் திருக்கதவு திறத்தல்.
    2015.08.02 அம்பாள் எழந்தருளப்பண்ணுதல்.
    2015.08.03 விஷேட பூசையும்,ஆராதனையும்.
    2015.08.04 கும்ப ஊர்வலச் சடங்கு.
    2015.08.05 விஷேட பூசையும்,ஆராதனையும்.
    2015.08.06 வீரகம்பம் வெட்டுதலும்,பலிச்சடங்கும்.
    2015.08.07 பக்திமிகு தீ மிதிப்பு வைபவம்.
    2015.08.08 பள்ளயச்சடங்கும்,சமுத்திர தீர்த்தமும்.
    2015.08.09 மாலை வைரவர் பூசையும்,திருக்கதவு அடைத்தலும்
    .

    ஆலய பிரதம பூசகர்-
    பத்ததி வல்லுனர், சக்திஸ்ரீ சிவத்திரு பூ.மகேந்திரராஜா ஜே.பி.(வைத்தியர்)

    அனைவரு ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.

    இவ்வண்ணம்
    ஆரையூர் ஸ்ரீ சித்திவிநாயகர், 
    ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய பரிபாலனசபை, 
    ஆரையம்பதி-02



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments :

    Post a Comment

    Item Reviewed: ஆரையம்பதி அருள்மிகு ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய மன்மத வருட உற்சவப் பெருவிழா ~ 2015 Rating: 5 Reviewed By: ADMiN
    Scroll to Top