728x90 AdSpace

Suthan
  • Latest News

    Friday, November 11, 2016

    ஆரையூர் நல். அளகேச முதலியார் | விவேகானந்த முதலியார்



    செந்தமிழை செந்தமிழ்க்காய்த் தினமுங்கற்போன்
    செந்தமிழைக் கற்றோர் தம் பால்
    வந்தனையும் உபசார மதிப்பு முள்ளோன்
    கூலவாணிகனார் ஈழம்
    வந்தனையோன் வாிபத்தால், உழவதனால்
    வாழ்க்கை வளஞ்செய்வோன் தெய்வ
    சிந்தனைசேர் ஆரையூர் அளகேச
    முதலி பண்பாடுடைய செம்மல்


    என்று புலவா்மணி பெரியதம்பிப்பிள்ளையவா்களால் புகழப்பட்ட அளகேச முதலி அவர்கள் மட்டக்களப்பு ஆரையம்பதி கிராமத்தில் பிறந்து வளர்ந்து இலக்கிய உலகில் தன் பெயரை பொறித்து அமரரானார். “கண்டதும் கற்க பண்டிதராவார்” என்ற பழமொழிக்கு இலக்காக தான் கண்ட நுால்களை எல்லாம் கற்று பெரிய கல்விமான் ஆனார்.
    ஆறாம் வகுப்பு வரை பாடசாலை கல்வியை கற்ற பின் பன்னிரெண்டாவது வயதில் பாடசாலையை விட்டு நீங்கி “சித்திர வேலாயுதர் சுவாமிக்கு கோபுர வாசலமைந்த சித்தாண்டி ஊரில் தம் வியாபாரத்தை விஸ்தரித்ததோடு கந்த புராணம், பாரதம், இராமாயணம் போன்ற நுால்களை கற்றுபாண்டிதியம் அடைந்தார். சித்தாண்டி மெதடிஸ்த மிசன் பாடசாலைகளில் பண்டிதராக விளங்கிய அமரா் அருளம்பலம் அவா்களின் துணையும் கிடைத்தது. .இவா் மட்டக்களப்பு பகுதியில் காலம்சென்ற திரு. ஏரம்பமூர்த்தி ஆசிரியா் அவா்களின் பின் கந்த புராண படலம் செய்பவதில் முன்னணியில் நின்றார் முதலியார் என்றால் மிகையாகாது.
    இவா் யாரேடும் மிகவும் அன்பாகவும் தாழ்மையாகவும் பேசும் சுபாவம் உடையவா். சுவாமி விபுலானந்தர், வித்துவான் புபாலபிள்ளை, வித்துவான் சரவணமுத்தன், பண்டிதர் சபாபதி, குமாரசுவாமி ஐயா், கலாசுரி எவ்.எக்ஸ.சி, வித்தியாரெத்தினம், சோ.நடராஜன், பண்டிதர் வீ.சி .கந்தையா, அருணாச்சல சேசிகர், புலவா்மணி பெரியதம்பிபிள்ளை போன்ற பெரியவா்கள் பால் அதிக மதிப்பும் மனமார்ந்த அன்பும் கொண்டவா்.
    இவா்பாடிய தமிழ்தாய் காவியம் எனும் நுால் மிகச்சிறப்புடையது. அதில் சில பாடல்களை நாம் ரசிப்போம்

    “உயிர் பன்னி ரெண்டெழுத்தாலுதித்தாயே
    உடம்புபதி னெட்டாய் விளங்கி நின்றாயே
    உயிராயுத மொன்று தாங்கி நின்றாயே
    உலகறிய விரட்டு நுாற்றெட்டாய் விரிந்தாயே
    அயராது முதலாகி சார்பாகி நின்று
    அனைவோரு மிசை யேத்த வரிணையமர்ந்து
    பயிரானவலியினிடை மெலியாய் விளங்கிடும்
    பாவலா்க் கினிதான பைந்தமிழ்க் கொடியே”

    ஐம்பெரும் காப்பியங்களையும் தமிழன்னை அணிந்தள்ள விதத்தை கற்பனை மூலம் காட்டுகின்றார் இலக்கிய மணி

    வளர்த்தவா்கள் உன்னழகு பார்த்திட விரும்பி
    வண்மைசெறி பனுவலாற் குண்டல மியற்றி
    குழையான காது களிரட்டிலு மணித்து
    கூறுவுரமீது சித் தாமணி புனைந்து
    வளையாபதி கையில் வாகாய்த் தரித்து
    வண்ணமணி மேகலை அரையினிற் புட்டி
    பளபளென மின்னிடும் சிலம்பையு மெடுத்து
    பாதமதிலே சூடிப் பரிவாய் மகிழ்ந்தார்.

    இதுவரையில் எவரும் காட்டாத வர்ணனைகள் காட்டி பாட்டமைத்தார் நம் புலவா் அளகேச முதலியார் என்றால் அது மிகையாகாது. இத்தமிழ்தாய் காவியத்தில் நுால்கள்ப்பண்டைய நாளில் இயற்றிய புலவா்களையும் அவா்கள் இயற்றிய நுால்களையும் மனதில் இருத்துவதற்கு ஏற்ற விதமாய் பாடல் அமைந்துள்ளது போற்றத்தக்கது. இவாின் இன்னுமெர் நுாலான ஆரையூர் கோவை எனும் நுாலில் ஆரையூர் கிராமம் ஆதிகாலத்தில் அமைந்திருந்த மாதிரியையும் அங்கு வாழ்ந்த மக்கள்களின் சேவைகளும் கோவில்களும் பாடசாலைகளும் மக்களின் தொழிலுமாக மிகவும் ஆராய்வுடன் கூறப்பட்டுள்ளது. ஆரையம்பதியில் ஓவ்வொரு தலத்திற்கும் தோத்திரப்பாடல் அமைத்துள்ளார்.

    ஆரையூர் எங்களது அழகு நாடே
    ஆன்றோர்கள் காத்து வந்த அரும் பெரிய வீடே
    வீரமுடன் பகைவா்கள் வீறுடளே சாடி
    விலக்கி எலலை காத்திடுவோம் வீணர்களை ஒட்டி
    ஆரெவா்க்கும் அஞ்சிடாத தீரா்களாம் நாங்கள்
    அன்புடைய மக்களுக்கு தஞ்சநிதமளிக்போம்
    பாரகமும் பரிமளிக்கும் சீரகத்தை வளர்ப்போம்
    பாட்டிசையில் மகிழ்ந்து நாமும் ஊரகத்தக் காப்போம்

    என்று நாட்டைக்காக்க படையில் சோ்ந்த விபுலாந்தரின் முன் மாதிரிக்கு ஏற்ப பாட்டை அமைத்தவா்.

    பிறந்த நாடு சிறந்து வாழ உரிமை நாட்டுவோம் - உண்மை
    சிறந்த தியாக வீரா் சூழ அச்சமோட்டுவோம்

    என வீர உணர்ச்சியை காட்டுகின்றார். 

    தான் பிறந்த ஆரையம்பதி திருநீலகண்ட விநாயகருக்கு பல பாடல்கள் பாடியதோடு தான் வளர்ந்த சித்தாண்டி சித்திர வேலாயுதர் தலத்தின் தல புராணத்தை பாடியுள்ளார்.சித்தாண்டி பெயர் வந்த வரலாறு அங்கு வழும் மக்களின் குடிவாகு அவா்கள் கோயிலுக்கு கொடுத்த நன்கொடைகளின் விபரம் கோயில் ஆட்சிமறை, வண்ணக்கு முறை வன்னிமை அமைப்புமுறை முதலியவை யாவையும் தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார் இந் நுால் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றின் சாட்சியாக காட்டப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தலபுராணத்தை இயற்றியவா் ஆரையம்பதி அமரா்.நல்அளகேச முதலியார். அமரா் அச்சிட்டவா் திரு.செ.கிருஸ்ணபிள்ளை.
    சித்துக்கள் செய்து ஆண்டியாகி சிகண்டி முனிவா் வாழ்நது சமாதியாகிய இடமே சித்தாண்டி எனப்பெயர் பெற்றது.இவா் தனது இரும்புவேலாயுதத்தை ஒர் அத்தி மரத்தடியில் நட்டு பந்தலமைத்து வாழ்ந்தார். இந்த இடமே தற்போது சித்திரவேலாயுதர் கோவில் அமைந்துள்ள இடம் ஆகும்.
    இவை தவிர இவா் இயற்றி அச்சிடாமல் பல நுால்கள் உண்டு “கந்த விரத அம்மானை”. “நவவீரா் பரம்பரையை விளக்கும் நுால்”, “சுகுந்தச்சக்கவா்த்தியின் சரிதம்” என்பன இவற்றுள் அடங்கும்.

    நன்றி - மண்முனைப்பு சஞ்சிகை - தமிழ்மணி .சிவ. விவேகானந்த முதலியார்
    நன்றி - http://arayampathy.lk
    Next
    This is the most recent post.
    Older Post
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments :

    Post a Comment

    Item Reviewed: ஆரையூர் நல். அளகேச முதலியார் | விவேகானந்த முதலியார் Rating: 5 Reviewed By: ADMiN
    Scroll to Top